வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் சில மாற்றங்களை செய்தால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
அதிக கொழுப்புள்ள மாமிசம், அதிக கொழுப்புள்ள பால், எண்ணெய், தேங்காய் போன்ற நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்
ஆற்றல் பானங்கள், சாஃப்ட் ட்ரிங்க்ஸ் போன்ற அதிக சர்க்கரை உள்ள பானங்களை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது
நீரிழிவு நோய் இருப்பவர்கள் மதுபானத்தை அடியோடு நிறுத்த வேண்டும். இது உங்கள் கல்லீரலை மிக விரைவாக பாதிக்கும்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக வேகமாக அதிகரிக்கிறது
நீரிழிவு நோயாளிகள் எந்தவிதமான இனிப்பு உணவுகளையும் உட்கொள்ளாமல் இருப்பது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்
மாம்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.