மூளைக்கு மிகவும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் உணவுகளை குழந்தைகள் மட்டுமல்லாது, பெரியவர்களும் எடுத்துக் கொள்வதன் மூலம் மறதி என்பதையே இல்லாமல் ஆக்கலாம்
பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் சியா விதைகள், ஆளி விதைகள் மற்றும் எள் போன்ற நட்ஸ் உணவுகளில் அதிக அளவு அமிக்டலின், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
ஆற்றல் மிக்க மூளைக்கு புரதமும் முக்கியம். காலை உணவில் புரதச்சத்து நிறைந்த முட்டை, பால் பொருட்கள், சோயாபீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவை இருக்க வேண்டும்.
மூளையை கூர்மைப்படுத்த மீன் உணவு முக்கியம். சால்மன், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு மீன்களில்,மூளையில் புதிய திசுக்களை உருவாக்க உதவும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
பேரிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை மூளைக்கு ஆற்றலை கொடுக்கும்.
மூளையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமான புரதம் வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் முட்டையில் உள்ளன.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தி, மூளைக்கு சக்தி அளிக்கின்றன.
மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், துரித உணவுகள், பொரித்த உணவுகள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். இதனால் உங்கள் மூளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.