உடல் பருமன் இந்த நட்களில் பலருக்கு உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது.
உடல் எடையை குறைக்கவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக கொழுப்புள்ள உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை இரவில் தவிர்க்கவும்.
இனிப்பு சுவை அதிகமாக உள்ள உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும். இது உடல் எடை இழப்புக்கும், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கும் சிறந்தது.
காபி மற்றும் டீயில் உள்ள காஃபின் உறக்கத்தைக் கெடுத்துவிடும். ஆகையால் இரவில் இவற்றை குடிக்க வேண்டாம்.
உலர் பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், இவை கனவாம உணவாக கருதப்படுகின்றன. ஆகையால் இவற்றை காலையில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இரவில் லேசான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வது உடல் எடையை வெகுவாக குறைக்க உதவும்.