அஞ்சல் அலுவலக திட்டமான, போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம், அசத்தலான வருமானம் கொடுக்கக் கூடியது.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், ஒன்று, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய் ஆகும். அதிகபட்ச முதலீட்டுக்கான வரம்பு ஏதுமில்லை.
பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் உதவியுடன், 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் பெயரிலும் கணக்கை தொடக்கலாம்.
அஞ்சலக திட்டத்தில் ஐந்து வருடத்திற்கான முதலீட்டிற்கு 7.5% வட்டி கிடைக்கும்.
அஞ்சலக முதலீடுகளுக்கு வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.