முதியவர்களை மட்டுமல்லாது இளம் வயதினரையும் மூட்டு வலி, முதுகு வலி போன்றவை பாதிக்கின்றன. இதற்கு எலும்புகள் பலவீனமாவதே முக்கிய காரணம்.
எலும்புகளின் அடத்தியை அதிகரிக்க சில உணவுகளை தவிர்ப்பதும் சில உணவுகளை சேர்த்துக் கொள்வதும் அவசியம்.
அதிக உப்பு சேர்த்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவை எலும்புகளின் கால்சியத்தை உறிஞ்சி பலவீனமாக்கும்.
மதுபான பழக்கத்தால் எலும்புகள் பலவீனமடையும். ஏனெனில் இதுவும் உடலின் கால்சியத்தை உறிஞ்சுகிறது.
அதிக சர்க்கரை உடலில் இருந்து கால்சியம், மெக்னீசியம் பொட்டாசியம் போன்ற சத்துக்களையும் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
டீயில் ஆக்ஸிலேட்டுகள் நிறைந்துள்ளன. இது எலும்புகளை பாதிக்கும். எனவே அளவோடு உட்கொள்ள வேண்டும்.
அல்ட்ரா வைலட் கதிர்களின் கீழ் வளர்க்கப்பட்ட காளான்கள் டி சத்து நிறைந்தவை
ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன
ப்ரோக்கலி போன்ற கால்சியம் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முட்டையில் விட்டமின் டி அதிகம் உள்ளது. இதை எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.