இந்த காலகட்டத்தில் நீரிழிவு நோய் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு ஆபத்தான நோயாக மாறி வருகின்றது.
விரைவாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இவற்றை நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
பழச்சாறுகள் வயிற்றிற்குள் சென்ற உடனேயே ஃப்ரூக்டோஸாக மாறி இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இது சர்க்கரை அளவை அதகரிக்கின்றது.
அதிக கொழுப்புள்ள பாலை நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. இது சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
ப்ரெட், பாஸ்தா போன்ற மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் சுகர் அளவு அதிகரிப்பது நிச்சயம்
உலர் பழங்களில் உலர் திராட்சைகள், கஜூர் மற்றும் அத்திப்பழம் ஆகியவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.
உருளைக்கிழங்கு, சாதம், கோதுமை சப்பாத்தி ஆகியவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் இவற்றால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.