உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரியாக விளங்கும் கல்லீரல், மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம்.
உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் பூண்டு கல்லீரல் சேரும் நச்சுக்களை அகற்றும் ஆற்றல் கொண்டது.
இரும்பு சத்து மட்டுமல்லாத எண்ணற்ற வைட்டமின்கள் நிறைந்த கீரை, கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த பப்பாளி கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முட்டைக்கோஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இது கல்லீரலை சுத்தம் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும்.
குர்குமின் நிறைந்த மஞ்சள் நச்சுக்களை நீக்குவதோடு, கல்லீரலில் உள்ள செல்கள் மீண்டும் உருவாக உதவுகிறது. கல்லீரலில் கொழுப்பு செய்வதையும் இது தடுக்கிறது.
நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது.
தாதுக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள வெண்ணை பழம், நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.