பேரை கேட்டாலே அஞ்சும் நோய்களில் ஒன்று புற்றுநோய். இது பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு, பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு புற்றுநோய் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று கப் காய்கறிகள் குறிப்பாக பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்பவர்களுக்கு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது.
நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் இரண்டு கப் பழங்களை சாப்பிட்டு வருவதும் புற்றுநோய் அபாயத்தை பெருமளவு குறைக்கும்
சிறுதானியங்கள், ஓட்ஸ் பார்லி போன்றவற்றை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் நார்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது புற்றுநோய் அபாயத்தை பெருமளவு குறைக்கும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி சிவப்பு இறைச்சி ஆகியவற்றை மிதமாக உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை தவிர்க்கலாம்.
அதிக கொழுப்புக் கொண்ட உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை அளவோடு சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயத்தை தவிர்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள அதிக அளவிலான சோடியம், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கும் ரசாயனங்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க கூடியவை.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.