இரவில் செர்ரி பழங்கள் சாப்பிட்டால் அவை உடலில் மெலடோனின் அளவை அதிகரித்து நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
அன்னாச்சி பழங்கள் செரிமானத்தை அதிகரித்து இரவில் நல்ல தூக்கத்தை பெற உதவுகின்றன.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகமாக உள்ளன, இது தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்தி தூக்கத்திற்கு உதவுகிறது.
கிவி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவை தூக்க சுழற்சியை சீராக்க உதவுகிறது.
பொதுவாக பெர்ரிகளில் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன.
பொதுவாக சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இந்த பழங்கள் தூக்கத்தை வரவைக்கின்றன.
திராட்சை பழம் உடல் அழற்சியைக் குறைப்பதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.