அழகான முகம் வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் ஆசை. முகம் பொலிவுடன் இருக்க அனைவரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
மிக எளிதாக முகத்துக்கு பொலிவு கொடுக்கும் இயற்கையான ஃபேஸ் பேக்குகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தேன் ஒரு ஈரப்பதமூட்டியாகும். இது சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். தேன் கொண்டு ஃபேஸ் பேக் போடுவது சருமத்துக்கு பளிங்கு போன்ற பொலிவை அளிக்கும்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சருமத்தை நீக்கி வறண்ட, சேதமடைந்த செதில்களை சரிசெய்கிறது. ரோஸ் வாட்டர் சருமத்தை பளபளப்பாக்கும்.
கடலை மாவில் மஞ்சள் கலந்து நீர் விட்டு பேஸ்ட் செய்து முகத்தில் பூசி வந்தால், நாளடைவில் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
முகத்தில் நெய் தடவி சிறிது நேரம் ஊறி பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவலாம். இது சருமத்திற்கு புத்துயிர் தரும்.
காபி மூப்பின் விளைவுகளை குறைப்பதுடன், சூரிய ஒளியால் ஏற்படும் தோல் சேதத்தைத் தடுக்கவும் பயன்படுகிறது. இது முகத்துக்கு கூடுதல் ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள், ஆகிய பழங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து ஃபேஸ் மாஸ்க் செய்து முகத்தில் பூசி வந்தால், முகப்பொலிவு பன்மடங்காக அதிகரிக்கும்
தயிரில் ஆலிவ் எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்து முகத்திலும், கழுத்திலும் தடவி 15-20 நிமிடம் விட்டு கழுவவும். இதனால் முகப்பொலிவு கூடும்.
உங்கள் சருமத்துக்கு ஏற்ப ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுப்பது நல்லது. உங்களுக்கு உள்ள ஒவ்வாமை, பிற மருத்துவ நிலைகளை கவனத்தில் கொள்ளவும்.