தூக்கம் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 7 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.
ஆனால் அளவிற்கு அதிகமான தூக்கம் நல்லதல்ல. இது கவலை தரக்கூடிய விஷயம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அளவிற்கு அதிகமான தூக்கம், சோம்பலை ஏற்படுத்தி மூளையை மந்தமாக்கும்.
அளவிற்கு அதிகமான தூக்கம், உடலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்குகிறது.
அதிக அளவிலான தூக்கத்தினால், உடல் புத்துணர்ச்சி பெறாது. மாறாக சோர்வு அதிகரிக்கும்.
அதிக அளவிலான தூக்கம், உங்களுக்கு குழப்பமான உணர்வை ஏற்படுத்தலாம்.
அளவிற்கு அதிகமான தூக்கம் மன அழுத்தத்தை சமாளிக்க முடியாத மனநிலையை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.