உணவுகளுக்கு சுவையை கூட்டும் தக்காளி உணவுகளுக்கு புளிப்பு நிறைந்த ஒரு புதுமையான சுவையை தருகிறது.
தக்காளியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு மீறனால் அமுதமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தக்காளியில் கால்ஷியம், ஆக்ஸலேட் அதிக அளவில் உள்ளதால், செரிமானம் ஆகாமல் சிறுநீரகங்களில் கற்களாக சேரும் அபாயம் உள்ளது.
மூட்டு வலி பிரச்னை இருந்தால், தக்காளி சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நலம்.
தக்காளியில் அல்கலாய்டு நிறைந்த சோலானின் மூட்டுகளில் வலியையும், வீக்கத்தையும் உண்டாக்குகிறது.
அதிக அளவில் தக்காளி சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் அல்லது அமிலத்தன்மை ஏற்படும்.
அளவிற்கு அதிகமான தக்காளியினால் இருமல், தும்மல், தொண்டையில் அரிப்பு போன்ற ஒவ்வாமைகள் ஏற்படலாம்.
அலர்ஜி பாதிப்புகள் இருப்பவர்கள் தக்காளியை விட்டு தள்ளி இருப்பது ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும்.