தலைவலி வந்தாலே மாத்திரைகள் போடும் பழக்கம் பலருக்கு உள்ளது.
வலி நிவாரணி தற்காலிகமாக வலியை போக்கினாலும் பக்க விளைவுகள் அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
தலைவலியிலிருந்து விடுபட அக்குபிரஷர் முறையை கடைப்பிடிக்கலாம். கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு மத்தியில் மசாஜ் செய்வதன் மூலம் பலனடையலாம்.
கடுமையான தலைவலியின் போது, ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் தலைவலி இருந்து விரிவாரணம் பெறலாம்
தண்ணீரில் இஞ்சியை துருவி கொதிக்க வைத்து, ஆறியபின் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து சிறிது தேன் கலந்து அருந்துவது பலன் கொடுக்கும்.
கடுமையான வலிக்கு கிராம்பு தைலம் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நன்றாக துருவிய இஞ்சி, துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்துவதும் நல்ல பலன் கொடுக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.