கோவையில் பலருக்கும் உடல் சூடு பெரிய பிரச்சனையாக இருக்கும். ஜூஸ், இளநீர் போன்றவற்றின் மூலம் உடலை நேரேற்றமாக வைத்திருப்போம்.
கோடையில் உடல் உஷ்ணத்தை தவிர்க்க எளிமையான வழி கீரைகளை சூப் வைத்து குடிக்கலாம். இதன் மூலம் உடல் சூடு குறையும்.
புதினா குளிர்ச்சி தன்மையை கொண்டுள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ்கள் உள்ளன.
கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
வெந்தயக் கீரையில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம்.
வெந்தயக்கீரை புதிதாக பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.
கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது லெட்யூஸ் கீரை. மேலும் செரிமான பிரச்னைகளை சரி செய்யும்.
கோடைக்காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு உகந்தது இந்த பசலைக் கீரை.
கறிவேப்பிலை கோடைக்காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். நொடிப்பொழுதில் வாந்தி உணர்வு மறைந்துவிடும்.