பொதுவாக பழங்களில் பிரக்டோஸ் எனப்படும் இயற்கை சர்க்கரை உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
இருப்பினும், உங்கள் உணவில் நீங்கள் பழங்களைச் சேர்த்து சாப்பிடலாம்.
பழங்களில் தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற ஆற்றல்கள் நிரம்பியுள்ளன.
பழங்களை சாப்பிடுவது இதய நோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கும்.
பழங்களிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை செரிமானத்திற்கு உதவுகிறது.
மேலும், பழங்கள் சாப்பிடுவது முழுமையான உணர்வை தருகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பழங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
எனவே, முடிந்தவரை புதிய அல்லது உறைந்த பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் அதிக பழச்சாறு குடிப்பதைத் தவிர்க்கவும்.