பழங்கள் காய்கறிகள், பால், மீன், இறைச்சி என விரைவில் வீணாகும் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன
அதிகமான உணவை வீணாகாமல் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துகிறோம். ஆனால், உற்பத்தியாகும் பொருட்கள் வீணாகமல் தடுக்க, அவை பதப்படுத்தப்படுகின்றன
உணவுகளை பொதுவாக உடனடியாக அதாவது ஃப்ரெஷ்ஷாக உண்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் பொருட்கள் ஊட்டச்சத்து குறையாமல் பதப்படுத்தப்படுகின்றன
பதப்படுத்தப்படும் உணவுகள் இன்று நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டன. சில பொருட்கள் பதப்படுத்தப்பட்டவை என்பதே நமக்கு தெரிவதில்லை
குழந்தைகள் விரும்பி உண்ணும் குக்கிகள், பிஸ்கட், கேக் அனைத்துமே உடல்நலனுக்கு கேடு விளைவிக்கின்றன
கறந்த பாலை பயன்படுத்தாவிட்டாலும், பதப்படுத்தப்பட்ட பாலை பயன்படுத்துவதைத் தவிர்த்தால் உடலாரோக்கியம் நன்றாக இருக்கும்
இறைச்சியில் புரதம் அதிக அளவில் உள்ளது. தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சி பயன்பாடு அதிகரித்துவிட்டது. உண்மையில், புரத உணவுகளை பதப்படுத்தி பயன்படுத்துவது ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்
கார்பன் ஏற்றப்பட்ட பானங்களை குடிப்பது நமக்கு நாமே செய்யும் தீங்கு என்று சொல்வது தவறில்லை
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை