இரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகமாகாமல் இருக்க நாம் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவைதான்.
அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வது உப்பசத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கும். இது டைப் 2 நீரிழிவு நோய் வர காரணம் ஆகலாம்.
பருவகால காய்கள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் கண்டிப்பாக காலை உணவை தவிர்க்காமல் இருக்க வேண்டும்.காலை உணவு
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக துரித உணவுகளையும் எண்ணெய் அதிகம் உள்ள பதார்த்தங்களையும் தவிர்க்க வேண்டும்.
உணவில் நார்ச்சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள பழச்சாறுகள் மற்றும் கேனில் வரும் ஜூஸ்களை தவிர்க்க வேண்டும்.