தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக நீரழிவு நோய் என்பது பெரும்பாலானோரை பாதித்து வருகிறது.
நீரழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும், உணவின் மூலம் கட்டுப் கட்டுப்படுத்துவதால் மருந்தின் அளவினை குறைத்து விடலாம்.
நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க தேர்ந்தெடுத்த உணவுகளை உண்ண வேண்டும் என்பது முக்கியம்.
கடலை மாவு நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்தும். கிளைசிமி குறியீடு மிகவும் குறைவாக உள்ள கடலை மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்நாக்ஸ்களை நீரிழிவு நோயாளிகள் கவலையின்றி சாப்பிடலாம்.
புரோட்டீன் அதிகம் நிறைந்த கடலை மாவினால் செய்யப்பட்ட அடை காலை உணவுக்கான சிறந்த தீர்வாக அமையும். இதில் காய்கறிகளை சேர்த்து தயாரிக்கும் போது பலன் பன்மடங்காகும்.
கடலை மாவு கலந்து பொறிக்கப்பட்ட வேர்க்கடலை உணவை நீரிழிவு நோயாளிகள் கவலையின்றி சாப்பிடலாம்.
ஆவியில் வேகவைத்து செய்யப்படும் குஜராத் சிற்றுண்டி ஆன டோக்ளா நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு.
கடலை மாவு கொண்டு செய்யப்பட்ட முறுக்குகள் டீயுடன் சாப்பிட மிகவும் ஏற்றவை.
கடலை மாவு தயாரிக்கப்பட்ட காரா சேவை நிழலில் நோயாளிகளுக்கு ஏற்ற சுவையான சிற்றுண்டி. இதில் கலக்கப்படும் மிளகு பூண்டு போன்ற பொருட்கள் ஆரோக்கிய நலன்கள் கொண்டவை.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. மருத்துவர் ஆலோசனையை பெறுவது என்றுமே சிறந்தது