நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிக அவசியம்.
நீரிழிவு உள்ளவர்கள் டயட்டில் நார் சத்துள்ள உணவுகளை அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கிய உணவுகளை குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும்.
குறைவான கிளைசிமிக் குறியீடு கொண்ட குடைமிளகாய், புரோக்கலி போன்றவை இயற்கையாக இன்சுலின் உற்பத்திக்கு உதவும்.
மாவு சத்து இல்லாத காரெட், காலிபிளவர், பிரோக்கலி, முளைகட்டிய தானியங்கள் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது
ஒமேகா 3 கொழுப்பு சத்து அடங்கிய மீன் உணவுகள், முட்டைகள், பாதாம் போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
குறைந்த GI கொண்ட கொய்யா, பிளம்ஸ், செர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, அவகோடா உள்ளிட்ட பழங்கள் நீரிழிவு நோயாளிகள் தயக்கம் ஏதும் இன்றி உட்கொள்ளலாம்.
ப்ரோக்கோலியை மெல்லும் போது உருவாகும் சல்ஃபோராபேன் என்ற கலவை உருவாகிறது. இது ரத்த சர்க்கரையை குறைக்கும் திறன் உள்ளதாக அறியப்படுகிறது.
நார் சத்து நிறைந்த காய்கறிகள், நட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், ரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, தசைகளும் வலுப்பெறுகின்றன.
உணவுடன் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்வதும் சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.