நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது.
நீரிழிவு நோய் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்.
வெந்தயக்கீரையை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரையில் நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இதை உட்கொள்வது இன்சுலினின் இயற்கையான உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இன்சுலின் உணர்திறனை இது மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் வெந்தயக்கீரையை கறியாக அல்லது கடைந்து கூட்டாக சாப்பிடலாம்.
வெந்தயத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டல் சபோனின் என்ற கூறு உள்ளது.
நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த வெந்தயகீரை செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
வெந்தயக்கீரையில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் மிகவும் குறைவாகவும் உள்ளதால் இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது.