நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அருமருந்து என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன
வீடுகளில் துளசி வளர்ப்பது அதன் புனிதத்தன்மைக்காக மட்டுமல்ல, அதன் மணம் பல நோய்களை போக்கும் என்பதாலும் தான்
வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோநியூட்ரியன்கள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, கே, சி, உர்சோலிக் அமிலம், லினாலூல், கார்வாக்ரோல், ரோஸ்மரினிக் அமிலம், லுடீன், எஸ்ட்ராகோல் மற்றும் ஜியாக்சாண்டின்
இலைகள் மட்டுமல்ல, துளசி விதைகளும் மருத்துவ பலன்கள் கொண்டவை. துளசியின் மருத்துவ பண்புகள் இவை..
அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது துளசி
துளசியில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது, துர்நாற்றத்தைப் போக்குகிறது
மன அழுத்தத்திற்கு எதிரான குணங்களைக் கொண்ட இயற்கையான மூலிகை துளசி, மன அழுத்தம் அல்லது கவலையை போக்கும் திறன் கொண்டது
துளசியில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி இரண்டுமே தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.துளசி இலைகள் அல்லது துளசி டீயை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் துளசி, செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது
ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் துளசி, நச்சுகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்கிறது. உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை