தினசரி காலையை துவங்கும்போது காலைக்கடன்கள் எனப்படும் உடல் சுத்தம் செய்வோம். அதில் உடலில் உள்ள முந்தைய தினத்தின் கழிவுகளை வெளியேற்றுவது முக்கியமான ஒன்று
காலைக்கடன்களில் முக்கியமான மலம் கழிப்பது அனைவருக்கும் இயல்பானதாக இருப்பதில்லை. மலச்சிக்கல் பிரச்சனையை பலர் எதிர்கொள்கின்றனர்
வயிறு காலியானால் தான் அடுத்த வேலையை பற்றி மனம் சிந்திக்கும் என்று சொல்பவர்களில் நீங்களும் ஒருவரா? இந்த பழக்கங்கள் உங்கள் மலச்சிக்கலை தீர்க்கும் சுலபமான வழிகள் ஆகும்
செரிமானத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து கொண்ட உணவுகள் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும். தினசரி சத்து 30 முதல் 35 கிராம் வரை நார்ச்சத்து உட்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனைகள் வராது.
வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்பம் தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது வயிற்றில் நல்ல பாக்டீரியா வந்தால்தான் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். தயிரில் உள்ள புரோபயாடிக் செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமான அமைப்பு சரியில்லாதவர்கள் தயிர் சாப்பிட வேண்டும்.
ஆயுர்வேதத்தில் முக்கியமான திரிபலாவில், நெல்லிக்காய் உள்ளது. திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு தூங்கும் முன் குடித்து வந்தால், காலையில் மலம் கழிப்பதில் பிரச்சனையே இருக்காது
உடலை குளிர்விக்கும் எலுமிச்சை ரசம், உடலில் உள்ள நச்சுகளையும் நீக்குகிறது. வயிற்றில் பிரச்சனை இருந்தால், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதனுடன் தேன் சேர்த்து குடிக்கவும்.
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை