கறிவேப்பிலையில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் நிக்கோடினிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளதால், இவை முடி உதிர்வை எதிர்த்து போராட உதவும்.
தினமும் காலை கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று உண்பது செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
கருவேப்பிலையை மென்று சாப்பிடுவது சிறந்த செரிமானம், நச்சு நீக்கம், சிறந்த கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
கறிவேப்பிலையில் உள்ள பலவிதமான நன்மைகள், சர்க்கரையின் அளவை ரத்தத்தில் சீராக வைத்திருக்க உதவுகிறது.
பலவிதமான ஆராய்ச்சிகளிலும் கறிவேப்பிலை என்பது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது என்று கூறுகின்றனர்.
வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.
ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், ரத்த சோகை நீங்கும்.