இன்றைய காலகட்டத்தில் இருக்கும் மோசமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான தாக்கங்கள் ஏற்படுகின்றன
உடல் கட்டமைப்பில் பெரும் பங்கு வகிக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில இயற்கையான உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அசைவ உணவு உண்ணாதவர்களுக்கு எலும்புகளை வலுப்படுத்த சோயாபீன் பாலின் தயிர் வடிவான டோஃபு ஒரு சிறந்த மாற்றாக கருதப்படுகின்றது.
கீரை வகைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித பண்புகள் உள்ளன. பச்சை காய்கறிகளும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்
வைட்டமின் சி மற்றும் கால்சியம் அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதில் அதிக பங்கு வகிக்கின்றது
அத்திப்பழத்தில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து தேய்மானத்தை குறைக்கிறது
கால்சியம் குறைப்பாட்டை சரி செய்ய சியா விதைகள் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக எலும்புகள் வலுவடையும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.