நமது உணவுப் பழக்கங்கள், எலும்பு பலவீனத்திற்கு காரணமாக அமைந்துவிடலாம்.
காபி டீ போன்ற பானங்களை அடிக்கடி குடிப்பதால், எலும்புகளின் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு பலவீனமடையும்.
சர்க்கரை அதிகம் கொண்ட இனிப்புகள், கேக்குகள் போன்றவை எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி எடுத்து, சல்லடையாக்கி விடும்.
அளவிற்கு அதிகமாக உணவில் உப்பு சேர்த்துக் கொள்வது, எலும்புகள் பலவீனமடைய வழிவகுக்கும்.
சோடா பானங்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் பிரிசர்வேட்டிவ்கள், எலும்புகளை பலவீனப்படுத்தும்.
மது அருந்துவதால், உடலில் உள்ள கால்ஷியம் சத்து குறைந்து எலும்பு மெலிதல் நோய் என்னும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரிக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது