சிலருக்கு உடல் எடை சரியாக இருந்தாலும் தொப்பை கொழுப்பு மட்டும் தொந்தியாக முந்தி நிற்கும்
குழந்தையைப் போல இடுப்பில் இருந்து இறங்க அடம் பிடிக்கும் இடுப்புச் சதையை சுலபமான குறைக்க இந்த டிப்ஸ் பயன்படலாம்
இன்றைய காலகட்டத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் பழக்கம் பெரும்பாலனவர்களுக்கு இருப்பதால், அவர்கள் உட்காரும் வழக்கத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்தால், தொப்பை குறையும்
உடலில் நீர்ச்சத்து குறையக்கூடாது. நீர் போதுமான அளவு பருகினால், உடலில் உள்ள கொழுப்புகள் நீர் மூலமாக வெளியேறும். இல்லாவிட்டால் அவை உடலில் கொழுப்பாக படிந்துவிடும்
மன அழுத்தம் இருந்தால், ஆழ்ந்த உறக்கம் இருக்காது. இது உடல் எடையையும், தொப்பை கொழுப்பையும் இழக்கச்செய்யும் உடலின் செயல்முறையை தடுக்கிறது. எனவே தினசரி போதுமான அளவு தூங்குங்கள்
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்ற பழமொழி சொல்வதைப் போல, உணவை நன்றாக மென்று உண்டால், ஆயுசு அதிகரிப்பது மட்டுமல்ல, தொப்பை இல்லா உடல்வாகையும் பெறலாம்
உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், அதற்கேற்றாற்போல தங்கள் உணவின் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதிகமான கொழுப்பு உடலில் இருந்து கரையாமல், தொப்பையை வளர்த்துவிடும்
தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.