உலகிளவில் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான கோகோ கோலா இந்தியாவிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.
கோகோ கோலா தனது வணிகத்தை மேலும் விரிவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரெடி டு ட்ரிங்க் டீ விற்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கோகோ கோலா இந்தியா நிறுவனம் Honest Tea என்ற பிராண்டின் கீழ் கிரீன் டீ விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
கோகோ கோலா நிறுவனம் லக்ஷ்மி குழுமத்தை சேர்ந்த டார்ஜிலிங் தேயிலை தோட்டமான மகாய்பரி டீ எஸ்டேட் உடன் முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது.
மகாய்பரி டீ எஸ்டேட்டில் இருந்து கோகோ கோலா தேயிலையை நேரடியாக வாங்கி கிரீன் டீயை தயாரிக்க உள்ளது.
ஹானஸ்ட் டீ , கோகோ கோலா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது.
ஐஸ் கிரீன் டீ-யை எலுமிச்சை-துளசி மற்றும் மாம்பழ சுவையில் அறிமுகம் செய்ய உள்ளது.