ஆரோக்கியமான சூப்பர்ஃபுட்ஸ் என்றால், முதலில் நினைவுக்கு வருவது பழங்களும் பழச்சாறுகளும் தான்
ஆரோக்கியத்தை அதிகம் தருவது பழமா இல்லை பழச்சாறா என்ற பட்டிமன்றத்தில் வெற்றி பெறுவது எது?
கொத்தமல்லி, புதினா போன்ற நில வகை இலைகளின் சாற்றையும் ஆரோக்கியமான ஜுஸ் என்ற பட்டியலில் சேர்க்கலாம்
எல்லா பழங்களையும் சாறாக்கி குடிப்பது நல்லதல்ல. ஏனென்றால், பழங்களில் தோல்களில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உண்டு
சில பழங்களை சாறாக மாற்றித் தான் குடிக்க முடியும். சாத்துக்குட்டி, எலுமிச்சை ஆகியவற்றை பழரசமாகத் தான் குடிக்க வேண்டும்
வாங்கின சில நாட்கள் வரை பழங்களை வைத்து சாப்பிடலாம், ஆனால், பழச்சாற்றை தயாரித்த உடனே பருகுவதே ஆரோக்கியம்
பல அரிய ஆரோக்கிய பண்புகளைக் கொண்ட நாகப்பழத்தை சாறாக செய்து குடிப்பதைவிட அப்படியே குடிப்பது ஆரோக்கியமானது
உடல் எடையை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கவும் பழங்களும் பழச்சறுகளும் உகந்தவை
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை