அதோ முக ஸ்வனாசனம் இறுக்கத்தை தளர்த்தி நல்ல உறக்கத்தை அளிக்கும்.
உத்தனாசனம் மலச்சிக்கல் பிரச்சனைகளை அகற்றி நல்ல இரவு நேர தூக்கத்தை கொடுக்கின்றது.
கேமல் பொஸ் என்ற ஆசனம் செரிமானத்துக்கும் முதுகு பகுதிக்கும் நன்மை அளிக்கும் ஆசனமாகும்.
தனுராசனம் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்து, தட்டையான வயிற்றை பெற உதவும்.
சவாசனம் இறுக்கத்தை தளர்ச்சி, நல்ல உறக்கத்தை அளித்து தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
பவன்முக்தாசனம் உடல் பருமனை குறைத்து ஒட்டுமொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கின்றது.
பலாசனம் இரவு உணவுக்கு பிறகு செய்யக்கூடிய மிக முக்கிய ஆசனங்களில் ஒன்றாகும். இது உடல் பருமன் மற்றும் உப்பசத்துக்கு நிவாரணம் அளிக்கின்றது.
யோகாசனங்களை செய்யத் துவங்கும் முன் பயிற்சியாளர்களின் ஆலோசனைகளை பெறுவது நல்லது