சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சில எளிய டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.
ஃபாஸ்டிங்க் சுகர் 126 mm/DL -ஐ விட அதிகமாகவும் சாப்பிட்டு 2 மணி நேரம் பிறகு சுகர் 200 mm/DL -ஐ விட அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
சர்க்கரை நோயின் அறிகுறிகளை அறிந்துகொண்டு அவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்
ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்களுக்கு வாக்கிங், சைக்ளிங் என ஏதாவது ஒன்றை செய்வதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்காள்.
உடலின் ஹார்மோன் சமன்பாட்டை பராமரிக்க நல்ல தூக்கம் மற்றும் தியானம் ஆகியவை அவசியமாகும்.
கார்போஹைட்ரேட்டை குறைவாகவும், நார்சத்து உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாகவும் உட்கொள்ளுங்கள்
சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியமாகும்