யூரிக் அமிலம் உடல் பியூரின்கள் என்னும் இரசாயனங்களை உடைக்கும் போது உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும்.
யூரிக் அமில அளவு அதிகரித்தால் இதனால் உடலில் பல வித உபாதைகள் ஏற்படுகின்றன.
நாம் தினசரி பயன்படுத்தும் சில காய்களை கொண்டே யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம்.
வைட்டமின் சி மற்றும் கே அதிகமாக உள்ள ப்ரோக்கோலியில் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தவும் எலும்புகளை வலுப்படுத்தவும் இவை உதவுகின்றன.
அதிக இரும்புச்சத்து உள்ள கீரை ஹீமோக்லோபின், ஆற்றல், சீரான இரத்த ஓட்டம் ஆகியவற்றை தந்து யூரிக் அமில அளவையும் குறைக்கின்றது.
பீடா க்ளூகன்ஸ் மற்றும் வைட்டமின் டி அதிகமாக உள்ள காளான் யூரிக் அமில பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும்.
குளிர்காலத்தில் வரும் கேரட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் காணப்படும் கூறுகள் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும்.
வெள்ளரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது.