நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இந்த 5 காய்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.
கேரட்டில் பீட்டா கரோட்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ மற்றும் கே, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஆகையால் இதை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்காது.
கீரை, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற பச்சைக் காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. இது டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
பாகற்காயில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்ததுள்ளன. இதில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதை உட்கொள்வதால் பசி குறைகிறது, இரத்த சர்க்கரை அளவும் குறைகிறது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் கலோரிகளும் மிகக் குறைவு. இது கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், மாவுச்சத்து, வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ள வாழைக்காய் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எடையைக் கட்டுப்படுத்தவும் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் இது உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.