உடல் எடை கூடினாலும் சரி, குறைஞ்சாலும் சரி! அதுக்கு இதுதான் காரணம்!

Malathi Tamilselvan
Mar 28,2024
';

உடல் எடை

ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உடல் எடை பராமரிப்புக்கும் தேவையான உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...

';

உணவு

நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படையானவை

';

கொழுப்பு

ஊட்டச்சத்துக்களைத் தவிர, உணவில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உடலில் படிந்து உடல் எடையைக் கூட்டுகிறது. எனவே கொழுப்பு உருவாகும் ஆதாரமான உணவில் எவை உடல் எடையுடன் நேரடி தொடர்புடையவை என்று தெரிந்துக் கொண்டால் உடல் எடை பராமரிப்பு சுலபமாகும்

';

கிழங்கு

பொதுவாகவே உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்பட அனைத்து வகையான கிழங்குகளும் உடல் எடையைக் கூட்டுபவை. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால், குண்டாக வேண்டுமானால் அதிகமாக உண்ணலாம்

';

அவகோடா

உடலுக்குத் தேவையான பல வகை ஊட்டச் சத்துக்களும் கலோரிகளையும் அதிக அளவில் கொண்ட அவகோடா பழம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடல் எடையும் நேரடி தொடர்பு கொண்ட பழம் இது

';

வெண்ணெய்

தாவர வகைக் கொட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்புகளும், கலோரிகளும் அதிக அளவில் உள்ளன. பாதாம் மற்றும் வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கூடும்.

';

புரதம்

புரதச் சத்து நமக்கு மிகவும் முக்கியமானது என்றாலும் உடல் எடையை கூட்டவும் குறைக்கவும் நேரடியாக தொடர்பு கொண்டது இந்த சத்து என்பதால், புரத உட்கொள்ளலில் கவனம் செலுத்த வேண்டும்

';

பால்

கொழுப்பு நீக்காத பால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, எடை மேலாண்மையுடனும் தொடர்புடையது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story