உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், அது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க நாம் தினசரி நமது டயட்டில் சேர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மக்கானா எனப்படும் தாமரை விதைகளில் கலோரிகளின் அளவு மிக குறைவாக உள்ளது. இது கொழுப்பின் அளவை குறைப்பதோடு நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்த உதவுகின்றது.
பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்கள் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும். கூடுதலாக இதில் நார்ச்சத்தின் அளவும் அதிகமாக இருப்பதால், இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பட்டானி, ராஜ்மா, கொண்டைக்கடலை, பயறு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை சுபலபமாக குறைக்கலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கோதுமை ரவை கஞ்சி உட்கொள்ளலாம். இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.