நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க, தங்கள் உணவில் அதிகப்படியான கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரிக்காயில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
பேரிக்காயில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
கொய்யாவில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன. கொய்யாப்பழத்தை உட்கொண்டு நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
ப்ளூ பெர்ரி எனப்படும் அவுரிநெல்லி இரத்த சர்க்கரை அளவை குறைப்பதுட்ன உடல் பருமனையும் குறைக்க உதவுகின்றன.
லைகோபீன், பொட்டாசியம், ஃபோலேட், நார்ச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள தக்காளி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.