உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால், அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
யூரிக் அமிலத்தை ஈசியாக குறைக்க உதவும் சில மசாலா பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது.
யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் தினமும் இஞ்சி உட்கொள்ளலாம். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது உடலில் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள இலவங்கப்பட்டை உடலில் சேர்ந்துள்ள யூரிக் அமில அளவை குறைக்கவும் உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றது.
நார்ச்சத்து அதிகம் உள்ள வெந்தயம் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிப்பதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைகின்றது. இது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.
ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ள தனியாவை (மல்லி விதைகள்) தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது யூரிக் அமிலத்தை வேகமாக குறைக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.