இன்றைய காலகட்டத்தில் உலகில் அதிக அளவிலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சீரற்ற வாழ்க்கை முறை, உணவு முறை உட்பட உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.
இயற்கையான வழியில், சில விதைகளை உட்கொண்டு உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த விதைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நம் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க சீரகத்தில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நமக்கு உதவுகின்றன. இதை ஊறவைத்தும், சீரக பொடி அல்லது நீராகவும் உட்கொள்ளலாம்.
அதிக நார்ச்சத்து உள்ள சியா விதைகள் இரத்த சர்கரை அளவை குறைப்பதோடு எடையும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.
குளுகோஸ் அளவை குறைக்கும் திறன் கொண்ட வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
அதிக மெக்னீசயம் உள்ள பூசனி விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, நீரிழிவு நோய் வராமலும் காக்கின்றது.
அதிக அளவு க்ளோரோஜெனிக் உள்ள சூரியகாந்தி இலை இயற்கையான வழியில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவியாக இருக்கும்.