அதிக இரத்த சர்க்கரை அளவு, அதிக கொலஸ்ட்ரால் இவை இரண்டும் இன்றைய காலத்தில் மக்களை பாடாய் படுத்தும் நோய்களாக உள்ளன.
இவற்றால் உடல் பருமன், மாரடைப்பு, இதய நோய்கள், என இன்னும் பல வித நோய்கள் நம் உடலை ஆட்கொள்கின்றன.
இவை இரண்டையும் குறைக்கும் வல்லமை படைத்த சில ரொட்டிகள் அதாவது சப்பாத்திகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதில் க்ளூட்டன் இல்லை. நார்ச்சத்து அதிகமுள்ள இதை உட்கொள்வதால் சர்க்கரை அளவு அதிகரிக்காது, கொழுப்பும் கட்டுக்குள் இருக்கும்.
இதில் அதிக அளவு இரும்புச்சத்து, மெக்னீஷியம், கேல்சியம், புரதம் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.
நீரிழிவு மற்றும் உயர் கோல்ஸ்ட்ரால் நோயாளிகளுக்கு ஓட்ஸ் ரொட்டி மிக சிறந்தது. இது இரத்த சர்க்கரை அளவை நன்றாக கட்டுக்குள் வைக்கிறது.
நார்ச்சத்து அதிகமாக உள்ள ராகி ரொட்டி பசியை கட்டுப்படுத்தி நீரிழிவி நோயையும் கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.