இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நாம் தினமும் பின்பற்ற வேண்டிய காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்
புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சமச்சீரான காலை உணவை தினமும் உட்கொள்வது நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை காலை உணவில் உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
காலை உணவில் மிக அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். இது சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும்.
முழு தானியங்கள், காய்கள், பழங்கள் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை காலையில் உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
காலையில் அதிக தண்ணீர் குடிப்பது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பலருக்கு காலையில் முதல் வேலையாக காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், இதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
காலையில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுடன் உடலும் நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.