காலை வேளையில் இந்த பழக்கங்களை பின்பற்றினால் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம்.
காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இது உடல் எடையை குறைக்க உதவும்.
காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடித்தால், செரிமானம் சீராகி, வளர்சிதை மாற்றம் அதிகரித்து உடல் எடை குறையும்
உலர் பழங்கள் மூலம் உடலுக்கு புரதச்சத்தும் நார்ச்சத்தும் கிடைக்கின்றது. ஆகையால், காலை வேளையில் உலர் பழங்களை உட்கொண்டால் நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு உடல் எடையும் குறையும்
பச்சையாக பூண்டை உட்கொள்வது பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இது கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றது.
டிடாக்ஸ் பானங்கள் நாளின் துவக்கத்திற்கு மிக ஏற்றவையாக கருதப்படுகின்றன. கேரட் சாறு, பீட்ரூட் சாறு, மாதுளை சாறு ஆகியவை டீடாக்ஸ் பானங்களாக கருதப்படுகின்றன.
காலையில், யோகா, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வது நாள் முழுதும் நம்மை சுறுசுறுப்போடு வைத்திருப்பதுடன் உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பையும் குறைக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.