ஏழை பணக்காரர், சிறியவர் பெரியவர் என்று பார்க்காமல் இந்நாட்களில் நீரிழிவு நோய் அனைவரையும் பாடாய் படுத்தி வருகிறது.
உணவில் முழு தானியங்களை அதிகம் சேர்த்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
க்ளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் கம்பு நீரிழிவு நோயாளிகளிக்கு சிறந்ததாக கருதப்படுகின்றது.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் அதிகம் உள்ள சோளம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் முழு தானியமாக கருதப்படுகின்றது.
பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்லா ராகி சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன் கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கிறது.
குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட சாமை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஏற்றது. அரிசிக்கு ஒரு சிறந்த மாற்றாக இதை பயன்படுத்தலாம்.
பார்லியில் உள்ள பீடா க்ளூகேன் இரத்த சர்க்கரை அளவை பராமரித்து கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.
குதிரைவாலியில் அதிக நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளன. இது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது.