இரத்த சர்க்கரை அளவையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சமையலறை மசாலாக்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்
இன்சுலின் எதிர்ப்பை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இலவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கின்றது. இது நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மசாலாவாக கருதப்படுகின்றது
ஆன்ட்டி செப்டிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கிராம்பு செரிமானத்தை சீராக்குவதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
தினமும் இஞ்சியை நம் சமையலில் பயன்படுத்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
பூண்டில் அலிசின் என்ற பயோ ஆக்டிவ் கூறு உள்ளது. இது இரத்த சர்க்கரை நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
அனைவரது வீடுகளிலும் இருக்கும் வெந்தயம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிறந்த மற்றும் எளிய வழியாக பார்க்கப்படுகிறது. இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.
மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது. வீக்கத்தை ஏற்படுத்தும் தன்மையையும் குறைக்கிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.