உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், அதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பல வித நோய்களின் ஆபத்து அதிகமாகிறது.
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய, இயற்கையான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
செர்ரியின் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) 20 தான். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நீரிழிவு நோய் உட்பட பல நோய்களை குணப்படுத்த உதவியாக இருக்கின்றன.
ஆளி விதைகளில் நார்ச்சத்து உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இலவங்கப்பட்டை நீரிழிவு நோயாளிகளுக்கும் பல வகைகளிலும் உதவுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
நெல்லிக்காய் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்றே கூறலாம். சுகர் நோயாளிகள் இதை தினமும் உட்கொள்ளலாம். இதன் மூலம் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க முடியும்.
பாகற்காயில் உள்ள சில பண்புகள் உடலில் இன்சுலினை போல பணிபுரிகின்றன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க இவை பெரிதும் உதவியாக இருக்கின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.