உணவில் பியூரின் அளவு அதிகமாக இருந்தால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்கி, அதன் மூலம் யூரிக் அமில படிகங்கள் கைகள் மற்றும் கால்களின் மூட்டுகளில் குவிந்து, வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகின்றன.
யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதால் மூட்டுவலி பிரச்சனையும் ஏற்படுகிறது. யூரிக் அமிலம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்க உதவும் சில குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
செர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவற்றை உட்கொள்வதால் யூரிக் அமிலம் குறைவதுடன் மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
ஓட்ஸ், வாழைப்பழம், தினை போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
யூரிக் அமிலத்தைக் குறைக்க ஆப்பிள் வினிகர் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள அழுக்கு நச்சுக்கள் வெளியேறி, உடல் டிடாக்ஸ் ஆகிறது.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற குளிர்ச்சியான அல்லது சூடான ஒத்தடம் பயனுள்ளதாக இருக்கும். எலும்புகள் மற்றும் தசைகளின் வீக்கத்தையும் வலியையும் குறைப்பதில் இது பயன்படும்.
முழங்கால் வலியைக் குறைக்க மஞ்சள் பேஸ்ட் தடவலாம். கடுகு எண்ணெயுடன் மஞ்சளை சூடாக்கவும். இந்த பேஸ்டை வலி உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்யவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.