இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சாறுகளை பற்றி இங்கே காணலாம்.
பாகற்காய் சாறில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. சுகர் நோயாளிகள் இதை தினமும் குடிக்க வேண்டும்.
வெள்ளரிக்காய் சாறு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கின்றது. தினமும் காலையில் வெள்ளரி சாறு குடிப்பது நல்லது.
ப்ரோக்கோலி சாறில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதோடு சுகர் அளவை குறைக்கவும் இது உதவுகின்றது. சுகர் நோயாளிகள் இதை தினமும் உட்கொள்ளலாம்.
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு பருகி வந்தால் கூடுதல் கொழுப்பு கரைவதை காணலாம். இது சுகர் அளவை குறைக்கவும் உதவும்.
உடலில் செரிமானம் சீராக புதினா உதவுகிறது. புதினா சாறு குடிப்பதன் மூலம் நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைக்கலாம்.
அவகேடோ சாறு தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.