இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் பலரை பாடாய் படுத்தும் ஒரு பெருநோயாக பரவி வருகிறது. நீரிழிவு நோய் உடல் பருமன், இரத்த அழுத்தம், வீக்கம், கண் நோய் மற்றும் பக்கவாதம் போன்ற அபாயத்தையும் ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் அதை கட்டுப்படுத்த பல வித உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்ள வெண்டியுள்ளது.
பழங்கள் ஆரோக்கியமானவையாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை உட்கொள்ளக்கூடாது.
சுகர் லெவலை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின் சி அதிகமாக உள்ள ஆரஞ்சு பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. இதில் காணப்படும் ஃபோலேட் இரத்த அழுத்தத்தையும் சமநிலையில் வைக்க உதவும்.
நீரிழிவு நோயாளிகள் கிவி சாப்பிடலாம். கிவியில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கலோரிகள் குறைவாக உள்ள பீச்சில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளன, இவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன.
வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளா பப்பாளியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.