மோசமான வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இந்நாட்களில் மிக அதிகமாகி வருகின்றன.
சிறுநீரகத்தில் சேரும் நச்சுகளை நீக்கி அதை பாதுகாத்து பலப்படுத்தும் சில பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிவப்பு திராட்சையில் உள்ள ஃப்ளெவனாய்டுகள் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
ஆரோக்கியமான சிறுநீரகத்தை பெற நாம் தினசரி ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளை உட்கொள்வது நல்லது.
தர்பூசணியில் உள்ள லைகோபைன் காம்பவுண்ட் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
அதிக அளவில் பொடாஷியம் உள்ள மாதுளை சிறுநீரகங்களை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த பழங்களை உணவில் சேர்ப்பது சிறுநீரக பாதுகாப்பில் மட்டுமல்லாமல் பிற நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.