இதய நோய்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாரடைப்பை தடுக்க உதவும் சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
அவகேடோ பழத்தில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உடலில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குகிறது. இதய ஆரோக்கியத்தைத் தவிர, அவகேடோ புற்றுநோய், மூட்டுவலி, மனச்சோர்வு ஆகியவற்றுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள் போன்ற விதை வகைகளில் நார்ச்சத்து, ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மாரடைப்புக்கான அபாயத்தை பல மடங்கு குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன.
இலவங்கப்பட்டை, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. இதன் நீரை தினமும் பருகலாம்.
திராட்சை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றது. திராட்சை விதை எண்ணெயில் லினோலிக் அமிலம் உள்ளது. இது இதய பிரச்சனைகளைத் தடுக்கிறது.
அக்ரூட் பருப்புகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது இதயத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.