உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
நுரையீரல்களும் கல்லீரலும் நம் உடலின் மிக முக்கிய பாகங்களாகும்.
கல்லீரல் மற்றும் நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கல்லீரல் மற்றும் நுரையீரலை பலப்படுத வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
கல்லீரல் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, பச்சை காய்கறிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சல்பர், அல்லிசின் மற்றும் செலினியம் நிறைந்துள்ள பூண்டு கல்லீரல் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
இஞ்சியில் உள்ள செரிமான நொதிகள் செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதால் இது நுரையீரலை வலுப்படுத்த உதவியாக இருக்கும்.
மஞ்சளில் உள்ள இது ஆண்டிஆக்சிடெண்ட், அழற்சி எதிர்ப்பு, ஆண்டிபயாடிக் பண்புகள் நுரையீரல் மற்றும் கல்லீரலை பலப்படுத்த உதவுகின்றன.