யூரிக் அமில அளவு அதிகமானால், உடலில் கீல்வாதம், மூட்டுவலி போன்ற பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கும் சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பவர்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் சிறுநீர் வழியாக யூரிக் அமிலம் வெளியேறுவது எளிதாகிறது.
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த காய்கள், பழங்கள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
பியூரின்கள் குறைவாகவும், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ள பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்கள் மற்றும் ஆளி விதை போன்ற விதைகளை யூரிக் அமில நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக உடலை விட்டு வெளியேறும் செயல்முறையை எளிதாக்குகிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் அதிகம் உள்ள காபியை குடிப்பதால் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம் என பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.